• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

யோகா அரசியலுக்கு அப்பாற்பட்டது. மத்திய மந்திரி விளக்கம்.

June 21, 2016 தண்டோரா குழு

இன்று உலகெங்கும் யோகா தினம் கொண்டாடப்பட்டது. உடலுக்கு மட்டுமின்றி உள்ளத்திற்கும் பயிற்சி அளிப்பது யோகா.

பலர் இதைத் தவறாக இந்துக்களின் மதச் சார்பான பயிற்சி என்று எண்ணி உதாசீனப் படுத்துகிறார்கள். ஆனால் இது மதத்திற்கு அப்பாற்பட்டு மனிதர்களின் உடலையும், ஆத்மாவையும் சுத்தப்படுத்தும் ஒரு பயிற்சியாகும். மற்றும் சிலர் இதற்கு அரசியல் சாயம் பூசி இந்துத்துவா என்றால் பாஜக, அதனால் பாஜகவின் யோசனையான யோகா தினத்தை புறக்கணிக்க நினைக்கின்றனர்.

அத்தகைய எண்ணமுடையவர்களில் பீகார் மாநில அமைச்சர்களும் அடங்குவர். யோகா தினமான இன்று பாஜகாவினரோடு சேர்ந்து கொண்டாட வேண்டுமென்ற காரணத்தினால் நிகழ்ச்சியையே தவிர்த்துள்ளனர்.

துணை முதன் மந்திரியான தேஜஸ்வி யாதவ், கல்வித்துறை அமைச்சரான அஷொக் சௌதர்ய், சுகாதார அமைச்சரான தேஜ் பிரதாப் யாதவ் ஆகிய மூன்று அமைச்சர்களும் பாஜக மீதுள்ள வெறுப்பால் விழாவையே புறக்கணித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சி பதஞ்சலி யோக குருவான பாபா ராம்தேவின் குழுவினரால் பாட்னாவில் உள்ள சரித்திரப் புகழ் பெற்ற காந்தி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாபா ராம்தேவ் இந்நிகழ்ச்சிக்கு ஆளும் கட்சியை மற்றும் எதிர்க் கட்சியைச் சேர்ந்த அனைத்துத் தலைவர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் எந்தவித பேதமுமின்றி அழைப்பு அனுப்பியிருந்தார்.

ஆயினும் சமூக நிகழ்ச்சியில் அரசியலைப் புகுத்தி அசாதாரணமாக நடந்து கொண்டுள்ளனர் சில பீகார் அமைச்சர்கள்.

மத்தியத் தொலைத் தொடர்பு மந்திரி ரவிஷங்கர் ப்ரசாத் பாட்னா நிகழ்ச்சிக்குத் தலைமைதாங்க, வேறு பல தலைவர்கள் ப்ரெம் குமார், நிடின் நவின் சஞ்சீவ் சௌரசிய அருண் குமார் போன்றோர் கலந்து கொண்டனர்.

இந்த யோகா நிகழ்ச்சி அனைவரையும் விருப்பு வெறுப்பின்றி ஒன்று சேர்க்க நடத்தப்படும் ஒன்று, வேற்றுமைக்கு இதில் இடமில்லை. இந்த நிகழ்ச்சி அரசியல், ஆற்றல், எதிர்ப்பு ஆகிய அனைத்துக்கும் அப்பாற்பட்டது. யோகா சித்தாந்தத்திற்கும் அப்பாற்பட்டது. இதை அரசியல் வளையத்திற்குள் கொண்டுவருவது தவறு என்று மந்திரி ரவிஷங்கர் பிரசாத் கருத்துத் தெரிவித்தார்.

பீகார் அரசு யோகாவை அரசியல் ஆக்குகிறது. யோகா இனவாதம் தொடர்புடையது என்று கருதுகிறது. என்று பாஜக MLA சஞ்சீவ் சௌரசியா குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க