August 3, 2018
தண்டோரா குழு
2000 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் WWEன் மிகப்பெரிய ஈர்ப்பாக இருந்தவர் 7 அடி உயரமுள்ள கேன் என்று அழைக்கப்படும் க்ளென் ஜேக்கப்ஸ்.
51 வயதான ஜேக்கப்ஸ்(Kane)ஒரு இராணுவ குடும்பத்தில் பிறந்தவர்.மல்யுத்த (WWE)விளையாட்டுகளில் பிரபலமான கேன்,படங்கள் மற்றும் அரசியலில் ஈடுபட்டு வந்தார்.இந்நிலையில் அமெரிக்காவில் மூன்றாவது பெரிய மாகாணமான டென்னஸியில் உள்ள நாக்ஸ் கவுண்டியில் மேயர் தேர்தல் நடைபெற்றது.
இதில் குடியரசு கட்சியின் சார்பில் கிளென் ஜேக்கப்ஸ்,ஜனநாயகக் கட்சித் தலைவரான லிண்டா ஹானினை எதிர்த்து போட்டியிட்டார்.இதில் ஜேக்கப் 66 சதவிகித வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்று டென்னஸியின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதையடுத்து,தேர்தலில் வெற்றி பெற்ற கேன் தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அதே போல், WWE தனது டுவிட்டர் பதிவில்,டென்னஸியின் நாக்ஸ் கவுண்டி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு கேன்ஸ்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக பதிவிட்டுள்ளது.