• Download mobile app
21 Oct 2025, TuesdayEdition - 3541
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

145வது வயதில் உள்ள உலகின் மிக வயதான மனிதர்

August 29, 2016 தண்டோரா குழு

இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த இம்பா கோத்தா என்பவர் உலகிலேயே மிக வயதான மனிதர் என்று அழைக்கப்படுகிறார்.அவருக்கு வயது 145.

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா பகுதியில் உள்ள ராகன் நகரைச் சேர்ந்தவர் இம்பா கோத்தா.இவர் 1870ல் டிசம்பர் 31ம் தேதி பிறந்தார்.இதற்கான ஆவணங்கள் கிடைத்திருப்பதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது உலகளாவிய அளவில் ஏற்கப்படும் போது உலகின் மிக வயதான மனிதர் என்ற பெருமையை இம்பா பெறுவார்.

மேலும்,இவர் நான்கு முறை திருமணம் செய்துள்ளார்.இவருக்கு 10 குழந்தைகள் பிறந்துள்ளனர்.ஆனால் மனைவிகளோ,பிள்ளைகளோ யாரும் இப்போது உயிருடன் இல்லை என்பது தான் வேதனையான விஷயம்.

இவருடைய பேரப்பிள்ளைகளும் கொள்ளு பேரப்பிள்ளைகள் மட்டுமே அவருடன் உள்ளனர்.கடந்த 1992ம் ஆண்டில் இருந்தே இவர் தன்னுடைய மரணத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறார்.இதற்காக அவருக்கென்று ஒரு கல்லறையை கூடத் தயார் செய்தார்.ஆனால்,24 ஆண்டுகள் கழித்தும் உயிருடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்பா கோத்தாவிடம் இவருடைய நீண்ட காலம் உயிர் வாழ்வதற்கான காரணத்தை கேட்ட போது,நான் எதற்கும் அவசரப்பட மாட்டேன்.மிகவும் நிதானமானவன்.இப்போதே இறக்கத் தயாராக உள்ளேன்.ஆனால்,மரணம் தான் என்னை நெருங்க மறுக்கிறது என்று தெரிவித்தார்.

இம்பாவின் பேரப்பிள்ளைகளில் ஒருவரான சூரியாந்தோ கூறிய போது,கடந்த சில ஆண்டுகளாகத் தான் எங்கள் தாத்தாவுக்கு முதுமை அதிகரித்துள்ளது.அவர் இப்போதும் ஆரோக்கியமாகவே உள்ளார் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க