• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சர்வதேச காகித தினத்தை முன்னிட்டு சிறப்பு தபால் தலை வெளியீடு

July 31, 2018 தண்டோரா குழு

ஆகஸ்ட் 1 ஆம் தேதி சர்வதேச காகித தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவையில் காகித வணிகர் சங்கம் சார்பில் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட உள்ளதாக கோவை மாவட்ட காகித வணிகர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“வருடந்தோறும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி காகித தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த தினத்தை கொண்டாடும் வகையில் காகித வணிகர் சங்கத்தினர் பல்வேறு கொண்டாட்டங்களை ஒருங்கிணைத்து உள்ளதாக தெரிவித்துள்ளனர்.இதற்காக அகில இந்திய அளவில் 35 நகரங்களில் இந்த கொண்டாட்டம் நடத்தப்படவுள்ளது.குறிப்பாக இந்த தினத்தில் கோவையில் சிறப்பு தபால் தலையை வெளியிட உள்ள

மேலும்,காகித வணிகர் சங்கத்தின் தலைமையிடமான மும்பையிலும் சிறப்பு தபால் தலையை வெளியிட உள்ளதாகவும் கூறினார்.இதனை மகாராஷ்டிரா முதல்வர் வெளியிட உள்ளதாக தெரிவித்தார்.காகிதம் அதிகளவிலான மரங்களை அழித்து தயாரிக்கப்படுவதாக தவறான கருத்து பொதுமக்கள் மத்தியில் இருப்பதாகவும்,ஆனால் அது தவறான கருத்து என பொதுமக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக கூறினார்.

குறிப்பாக 35 % காகிதங்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்களால் தயாரிக்கப்படுவதாகவும், விவசாய கழிவு பொருட்களாலும் காகிதம் தயாரிக்கப்படுவதாகவும் எனவே மரங்கள் இதனால் அழிவதில்லை என கூறினார்.காகித தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டியும் நடத்தப்பட்டு அதற்காக சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.கோவையில் காகித தினக் கொண்டாட்டங்கள் இந்திய தொழில் வர்த்தக சபையில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்”.

மேலும் படிக்க