May 8, 2018
தண்டோரா குழு
பாலியல் வன்முறை,பலாத்காரம் போன்ற பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு பெண்கள் அணியும் ஆடைதான் காரணம் எனக்கூறினால் அது முட்டாள் தனமானது என அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,டெல்லியில் பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பாலியல் வன்முறை பற்றி பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர்,
பெண்களுக்கு எதிரான கணிசமான எண்ணிக்கையிலான குற்றங்கள் தெருக்களில் நடைபெறுவது இல்லை,அவர்களுடைய வீடுகளில் தான் நடைபெறுகிறது.குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களால் மேற்கொள்ளப்படும் குற்றங்களை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுப்பது கடினம்.
பலாத்கார சம்பவங்களுக்கு பெண்கள் அணியும் ஆடைகளே காரணம் என சிலர் புகார் கூறுகின்றனர்.அப்படியென்றால்,மூதாட்டிகளும்,குழந்தைகளும் பலாத்காரம் செய்யப்படுவது ஏன்?பெண்கள் பாதுகாப்பிற்கு போலீசார் இன்னும் விழிப்புடன் செய்யப்பட வேண்டும்.பலாத்காரத்திற்கு ஆளாகும் பெண்களில் 10ல் ஏழு பேர்,நண்பர்கள்,உறவினர்களால் பாதிக்கப்படுகின்றனர்.இதனால், போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது என கூறினார்.