• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தொலைக்காட்சி தொடர் போல் கடத்தப்பட்ட குழந்தை

October 18, 2016 தண்டோரா குழு

தொலைக்காட்சி தொடரை பார்த்து அதில் வரும் கடத்தல் சம்பவத்தை போல் நான்கு வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் புர்னிஷா(23).அங்குள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவி. அதே கல்லூரியில் மயாங்மேத்தா(20) என்பவரும் படித்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் காதலித்து வந்த அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். திருமணத்துக்கு பிறகு ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கு அதிக பணம் தேவைப்படும் என்று நினைத்த அவர்கள், எப்படி பணம் திரட்டுவது என்று யோசித்தனர்.

இந்நிலையில் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் புதுமண தம்பதியினர் ஒரு குழந்தையை கடத்தி பணம் பறிக்கும் காட்சி ஒன்று இடம்பெற்றது. இதே போல் ஒரு குழந்தையை கடத்தி பணம் பறிக்கலாம் என்று முடிவு செய்தனர்.

புர்னிஷாவின் தாய் மாமன் ரித்தேஷ், ஒரு நிதி நிறுவனத்தை நடத்தி வருகின்றார். அவருக்கு யூக் என்னும் 4 வயது ஆண் குழந்தை உள்ளது. அந்த குழந்தையை கடத்தி பணம் பறிக்கலாம் என்று புர்னிஷா யோசனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, நேற்று தன் தாய் மாமன் வீட்டுக்கு வந்த புர்னிஷா, யூக்வுடன்நைசாக பேச்சு கொடுத்துள்ளார். பின்னர் சுமார் 3:30 மணியளவில் ஸ்கூட்டரில் ஏற்றி செல்கிறேன் என்று கூறி அந்த குழந்தையை அழைத்து சென்றுள்ளார்.

ஏற்கனவே திட்டமிட்ட படி, மயான் மேத்தா, அவரது நண்பர் சிந்தால் ஆகியோர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பதுங்கி இருந்தனர். அங்கு சென்று புர்னிஷா குழந்தையை கொடுத்துள்ளார். அவர்களுக்கு பரத் என்ற இன்னொரு நண்பரும் உதவிக்கு வந்துள்ளார்.

அவர்கள் குழந்தையின் தந்தை ரித்தேசுக்கு தொலைபேசியில் தொடர்புக்கொண்டு, நாங்கள் உங்கள் குழந்தையை கடத்தி வைத்துள்ளோம். உங்களுக்கு குழந்தை வேண்டுமென்றால் எங்களுக்கு 50 லட்சம் ருபாய் தரவேண்டும் என்றும் போலீசுக்கு சென்றால் குழந்தையை கொன்று விடுவோம் என்று கூறியுள்ளனர்.

ஆனால், ரித்தேஷ் உடனே காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர்கள் அப்புகாரை ஏற்றுக்கொண்டு கண்காணிப்பில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் உள்ள மற்ற 4 காவல் நிலையமும் உஷார்படுத்தப்பட்டது.

குழந்தையை கடத்தி வைத்து இருந்தவர்கள் ரித்தேசை மீண்டும் தொடர்புக்கொண்டனர். அவர்களுக்கு இடைய நடந்த உரையாடலை காவல்துறையினர் பதிவு செய்தனர். அவர்கள் எங்கிருந்து தொடர்புகொள்கின்றனர் என்பதை கண்டுபிடித்தனர்.

அவர்கல் மன்ச ரோவர் காலனி என்ற இடத்தில் அவர்கள் பதுங்கி இருந்தது தெரிய வந்துள்ளது. உடனே காவல்துறையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்து புர்னிஷா உள்ளிட்ட 3 பேரை கைது செய்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். ஆனால் அவர்களுக்கு உதவ வந்த பரத் மட்டும் தப்பி விட்டான். அவனை பிடிக்க காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

குழந்தை யூக் கடத்தப்பட்ட 4 மணி நேரத்தில் காவல்துறையினர் குழந்தையை மீட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க