July 22, 2025
தண்டோரா குழு
மனித-வனவிலங்கு மோதலைப் பற்றி விவாதிக்கும்போது, யானைகள், புலிகள் மற்றும் சிறுத்தைகள் போன்ற பெரிய விலங்குகள் தான் பொதுவாக முதலில் மக்களின் நினைவுக்கு வருகின்றன. இருப்பினும், இந்த சூழலில் பாம்புகளும் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன. இந்தியாவில், பாம்புக்கடி ஒரு பெரிய பொது சுகாதார கவலையாகும், இது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50,000 உயிர்களைக் கொல்கிறது.
இந்த அதிக இறப்பு விகிதம் பெரும்பாலும் பாம்புகள் பற்றிய பொது விழிப்புணர்வு மற்றும் புரிதல் இல்லாததால் ஏற்படுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் பாம்புக்கடி சம்பவங்களைக் குறைப்பதற்கும்,வனஉயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (WNCT) சார்பாக “பாம்புகளை அறிவோம் பாம்பு கடி மரணமில்லாத கோவையை உருவாக்குவோம்”என்ற தலைப்பில் ஒரு கல்வி புத்தகத்தை உருவாக்கியுள்ளது.
இந்த புத்தகத்தை கோவை மாவட்ட ஆட்சியர்
பவன்குமார் K. கிரியப்பனவர்,கள இயக்குநர், ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் வனப் பாதுகாவலர், கோயம்புத்தூர் வட்டம் வெங்கடேஷ், I.F.S,பத்ரசாமி,(ஓய்வு) மாவட்ட வன அலுவலர்
திருமுருகன், வனச்சரக அலுவலர் கோயம்புத்தூர் பிரிவு ஆகியோர்
வெளியிட்டனர்.
இந்த விழிப்புணர்வு முயற்ச்சி மூலம் சகவாழ்வை வளர்ப்பதையும், தமிழ்நாடு முழுவதும் பாம்புக்கடி தடுப்புக்கான ஒரு முன்மாதிரியாக கோயம்புத்தூரை மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.