• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

9 வயசு 43 கொசுக்கடி “சாதனை” படைத்த ரஷ்ய சிறுமிக்குப் பரிசும், பாராட்டும்

August 16, 2016 தண்டோரா குழு

கொசுக்களோடு குடும்பம் நடத்தி வருபவர்கள் நம்மவர்கள்.அதிலும் தமிழகத்தில் கொசுக்கடி வாங்காத ஒரு குடிமகனும், குடிமகளும் இருக்கவே முடியாது.ஆனால் வெறும் 43 கொசுக்கடி வாங்கிய 9 வயது சிறுமிக்கு பரிசு கொடுத்து பாராட்டிக் கௌரவப்படுத்தியுள்ளனர் ரஷ்யாவில்.

நம்ம ஊரில் கொசுவை ஒரு கையால் அடித்து விட்டு,மறு கையால் வேரு வேலை செய்வது ரொம்ப சாதாரணம்.ஆனால், வெளிநாடுகளில் கொசுவை பார்த்தாலே ஏதோ டிராகுலாவை பார்த்தது போல அலறி ஓடுவார்கள்.இந்த நிலையில் ரஷ்ய நாட்டின் பெரஸ்னிகி என்னும் நகரில் வருடா வருடம் கொசு திருவிழா என்று ஒரு வினோத திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியே யார் அதிக அளவில் கொசுக்கடி வாங்குகிறார்கள் என்பது தான்.அதற்காக நகருக்கு அருகே உள்ள காட்டுப் பகுதிக்குள், வெறும் உடம்போடு போய் தங்கி விட்டு வர வேண்டும்.முடிந்தால் ஒரு கண்ணாடி ஜாடியில் சுமார் 100 கொசுகளைப் பிடிக்க வேண்டும்.

இந்த விழாவில் கலந்து கொண்வடர்களிலேயே 9 வயது சிறுமியான இரினாவின் உடலில் மொத்தம் 43 கொசுக்கடிகள் இருந்தன.இந்தச் சிறுமியை தான் அதிக அளவில் கொசுக்கள் கடித்திருந்தன.எனவே, இவருக்கே முதல் பரிசை கொடுத்துப் பாராட்டியுள்ளனர்.

மேலும், பரிசு கிடைத்ததோடு மட்டுமல்லாமல் ரொம்பவும் சுவையான பெண் என்ற பட்டத்தையும் இந்த 9 வயது சிறுமி இரினாவுக்கு திருவிழாவும், கொசுக்கடியும் தேடி கொடுத்துவிட்டது.ஊரெல்லாம் கொசுவுக்கு பயந்து நடுங்கும் நிலையில் அதுவும் ஜிகா பீதி பட்டையை கிளப்பி வரும் நிலையில் ரஷ்யாவில் கொசு திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

ஆனால்,இரினா வாங்கிய கொசுக்கடி கடந்த 2013ல் வெற்றி பெற்றவர் வாங்கியதை விட குறைவு தான்.கடந்த 2013ல் வெற்றி பெற்றவர் உடம்பில் 100க்கும் மேற்பட்ட கொசுக்கடி இருந்ததாம்.பேசாமல் இதையும் ஒலிம்பிக்கில் சேர்த்தால் இந்தியாவுக்குக் கண்டிப்பாக பதக்கம் கிடைக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

மேலும் படிக்க