• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து மாலத்தீவு விலகியது ஏன் ?

October 15, 2016 தண்டோரா குழு

மாலத்தீவுக்கு எதிராக காமன்வெல்த் அமைப்பு செயல்படுவதால் காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து மாலத்தீவு வெளியேறுகிறது என மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் முகமது ஆசிம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் உள் விவகாரங்களில் காமன்வெல்த் அமைப்பு தலையிடுகிறது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. மாலத்தீவுக்கு எதிராக காமன்வெல்த் அமைப்பு பாரபட்சமாக செயல்படுகிறது . மாலத்தீவின் சுதந்திரம், இறையாண்மையைப் பாதுகாக்க இக்கூட்டமைப்பில் இருந்து வெளியேறியுள்ளோம் என மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் முகமது ஆசிம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து காமன்வெல்த் பொதுச்செயலாளர் பேட்ரிகா ஸ்காட்லேண்ட் கூறுகையில்,

மாலத்தீவு மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம் , கூட்டமைப்பில் இருந்து மாலத்தீவு பிரிந்துவிட்டதாக கருதவில்லை இது ஒரு தற்காலிக பிரிவு தான். காமன்வெல்த் கூட்டமைப்பில் விரைவில் மாலத்தீவு மீண்டும் இணையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மாலத்தீவில் அதிபர் அப்துல்லா யாமின் அப்துல் கயூம் தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சியில் ஜனநாயகம் நசுக்கப்பட்டு வருவதாக சர்வதேச அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதன் காரணமாகவே காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து மாலத்தீவு விலகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க