November 25, 2017
தண்டோரா குழு
இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சயீத் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பத்மாவதி. சித்தூர் பகுதியை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்படத்தில் வரலாற்றை திரித்து எடுக்கப்பட்டுள்ளதாக பெரிய அளவில் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் தற்போது பத்மாவதி படத்தை மேற்கு வங்கம் மாநிலத்தில் திரையிட சிறப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
ஆனால், இதற்கு முன்னதாக, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநில அரசுகள் இந்த படத்தை திரையிட அனுமதிக்கமாட்டோம் என தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.