July 26, 2018
தண்டோரா குழு
மேற்குவங்க மாநிலத்திற்கு ‘பங்களா’ என பெயர் மாற்றம் செய்யும் வகையில் அம்மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
மேற்கு வங்க மாநிலத்தை மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது.இந்தியாவின் தலைநகரமாக 1911ம் ஆண்டு வரை கொல்கத்தா இருந்தது.பின்னர், புதுடெல்லி தலைநகராக மாறியது.எனினும் கொல்கத்தா என்னும் பெயரிலேயே அம்மாநிலம் அழைக்கப்பட்டது.
கடந்த 2002ம் ஆண்டு புத்ததேப் பட்டாச்சார்யா தலைமையிலான இடது முன்னணி அரசு கொல்கத்தாவை மேற்கு வங்காளம் என மாற்றம் செய்தது.இந்நிலையில் மாநிலத்தின் பெயர் ஆங்கில எழுத்தில் டபிள்யூ(W) என்ற எழுத்தில் தொடங்குவதால், கரவரிசையின் படி அந்த மாநிலம் பட்டியலில் பின் வரிசையில் உள்ளது.எனவே,மேற்கு வங்காளம் பெயரை மாற்ற மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு முயற்சி செய்து வருகிறது.
இதையடுத்து,இதனை மாற்றி அகரவரிசையில் முன்னிலை பெறும் வகையில் அந்த மாநிலத்தின் பெயரை மாற்றி 2016ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அந்த வகையில்,ஆங்கிலத்தில் பெங்கால் எனவும் இந்தியில் பங்காள் எனவும் வங்க மொழியில் பாங்ளா எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
ஆனால்,ஒரு மாநிலத்தின் பெயர் 3 மொழிகளில் வெவ்வேறாக இருப்பது சாத்தியமல்ல எனக்கோரி மத்திய உள்துறை அமைச்சகம் அந்த மாநிலத்தின் கோரிக்கையை நிராகரித்து விட்டது. இதையடுத்து,மீண்டும் பெயர் மாற்றும் முயற்சில் இறங்கிய மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு இது தொடர்பாக அமைச்சரவை கூட்டம் கூட்டி அனைத்து மொழிகளிலும் பங்காள என ஒரே பெயரில் அழைக்க முடிவெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக மேற்கு வங்காள சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின்படி இந்தி,ஆங்கிலம்,வங்கம் உள்ளிட்ட 3 மொழிகளிலும் “பாங்ளா” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இத்தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும்.பின்னர் இது அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.