• Download mobile app
17 Oct 2025, FridayEdition - 3537
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குளியலறையில் மாட்டிக் கொண்ட மூதாட்டி: உணவகப் பணிப்பெண் மீட்டார்

October 19, 2016 தண்டோரா குழு

“குளிக்கப் போய் சேறாக்கி வந்தான்” என்று தமிழில் பழமொழி இருக்கிறது. ஆனால், குளிப்பதற்காக குளியல் அறைக்குச் சென்ற 86 வயது மூதாட்டி, உள்ளே நான்கு நாட்கள் சிக்கிக் கொண்ட சம்பவம் இங்கிலாந்தில் நடந்திருக்கிறது. நல்ல காலமாக அவரை அங்குள்ள ஒரு உணவகத்தின் பணிப் பெண் மீட்டார்.

இந்த சுவையான சம்பவம் இங்கிலாந்து லண்டனுக்கு வடகிழக்கை உள்ள எஸ்ஸெக்ஸ் என்ற இடத்தில் நடந்திருக்கிறது.

டோரீன் மான் (86) என்ற அந்தப் பெண்மணி அருகில் உள்ள ஓர் உணவகத்தில் வழக்கமாக உணவு அருந்துவது வழக்கம். அவருக்கு அந்த உணவகத்தில் பணியாற்றும் சோனியா காங்ரேவ் என்ற பெண் நல்ல பழக்கம். கடந்த புதன்கிழமை டோரீன் மானுக்குப் பிறந்த நாள். எனினும், வழக்கம் போல உணவகத்திற்கு வந்தார். ஆனால், அதற்குப் பின், மூன்று நாட்கள் வரவில்லை. ஒருவேளை டோரீன் மானைப் பார்க்க வந்திருக்கலாம், அதனால், கடைக்குவரவில்லை என்று சோனியா காங்ரேவ் நினைத்துக் கொண்டார். எனினும், அடுத்த தினங்களிலும் டோரீன் மான் வரவில்லை என்பதால், போலீசாருக்குத் தகவல் தெரிவித்து வீட்டுக்குள் நுழைந்தார்.

வீட்டின் சாவி ஒரு நகல் காங்ரேவிடம் இருந்ததால், உள்ளே குளியலறையில் இருந்து யாரோ உதவி கோரி கூச்சல் போடுவது கேட்டது.போலீசார் உடனே கதவைத் திறந்து உள்ளே பார்த்தால்,குளியல் தொட்டியில் படுத்தபடி அசையாமல் இருந்தார் டோரீன் மான்.அவரைக் காவல் துறையினர் மீட்டனர்.

நான்கு நாட்களும் அவர் குளியலறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார். குளியல் தொட்டியில் குளித்துக் கொண்டிருந்த அவரால், கை, கால் அசைக்க முடியவில்லை.

“நான்கு நாட்களாகக் குடிநீர்க் குழாயில் வந்த குடிநீரைக் குடித்துக் கொண்டேன். குளிரால் பாதிக்கப்படாமல் இருக்க குளியல் தொட்டியில் வெந்நீரை ஊற்றி, சமப்படுத்திக் கொண்டேன். குளிரைச் சமாளிக்க, இங்குள்ள கனமான துவாலை (டவல்), துணிகளைப்பயன்படுத்திக் கொண்டேன்” என்றார் அந்த மூதாட்டி. மனோ தைரியமும் அவர் உயிர் பிழைக்கக் காரணமாக இருந்தது.இத்தகைய ஆபத்தில் சிக்கிய போதும்,பதற்றமடையாமல் அமைதி காத்ததாக டோரீன் தெரிவித்தார்.

“அவர் எங்கள் உணவகத்துக்கு வழரக்கமாக வருவார். கடந்த சில நாட்கள் வராதது சந்தேகம் ஏற்படுத்தியது. அதனால், போலீசார் அவரை மீட்க நேர்ந்தது.

“இதுபோல் ஏதாவது நடந்தால், அவருக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே டோரீன் மானுக்கு கைபேசி வாங்கித் தர நினைத்திருக்கிறேன்.” என்று காங்க்ராவ் தெரிவித்தார்.

மேலும் படிக்க