January 29, 2018
தண்டோரா குழு
இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறை செயலாளராக விஜய் கேஷவ் கோகலே இன்று(ஜன 28) பொறுப்பேற்றார்.
இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெயஷங்கரின், நான்கு ஆண்டு பதவி காலம் முடிவடைந்த நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறை செயலாளராக,விஜய் கேஷவ் கோகலே இன்று பொறுப்பேற்றார்.
விஜய் கேஷவ் கோகலே கடந்த 2016ம் ஆண்டு, ஜனவரி மாதம் முதல் 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை, சீனாவுக்கு இந்தியா தூதுவராக இருந்தார். கடந்த 2017ம் ஆண்டு, வெளியுறவு துறை செயலாளராக நியமிக்கப்படுவதற்கு முன், வெளியுறவு அமைச்சரகத்தில் பொருளாதார உறவுகள் துறை செயலாளராக பணியாற்றினார்.
கடந்த 2010ம் ஆண்டு, ஜனவரி மாதம் முதல் 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை மலேசியாவின் உயர் ஆணையராக இருந்தார். அக்டோபர் 2013 முதல் ஜனவரி 2016 வரை ஜெர்மனி நாட்டின் இந்திய தூதுவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.