October 13, 2018
தண்டோரா குழு
கவிப்பேரரசு வைரமுத்து மீது பாடகி சின்மயின் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களும் செல்லலாம் என தீர்ப்பு அளித்த நீதிபதி கம்யூனிஸ்ட் கட்சியில் சிறுவயதில் இருந்ததாகவும்,வழக்கை தொடர்ந்தது இஸ்லாமிய பெண்மணி எனவும்,வழக்கை நடத்தியது கம்யூனிஸ்ட் அரசு என்பதால் வழக்கை சரிவர கையாளவில்லை என்றும்,எனவே தீர்ப்பை மறு ஆய்வு செய்து மாற்றம் செய்ய வேண்டும் என்றும்,மசூதியில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தீர்ப்பு வழங்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.
நீதிமன்றம் தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாக கூறும் கேரள அரசு,உச்ச நீதிமன்றம் அளித்துள்ள பல தீர்ப்புகள் அமல்படுத்தாமல் இருப்பதை சுட்டிக்காட்டினார்.
திருப்பூர் அருகே பொங்கலூரில் வரும் டிசம்பர் 23,24,25 ஆகிய மூன்று நாட்களில் 1 லட்சம் குடும்பத்தை கொண்ட 5 லட்சம் பேரை வைத்து மிகப்பெரிய யாகபூஜையும்,ஆயிரத்து எட்டு நாட்டு மாடுகளை கொண்ட கஜ-பூஜை நடைபெறவுள்ளதாகவும்,அதற்கான ஆலோசனை கூட்டம் நடந்து வருவதாக தெரிவித்தார்.
மேலும்,ஐ.ஜி.பொன்மாணிக்மவேல் சிறப்பாக செயல்படுவதால் பதவியை நீட்டித்து சிலைகள் கடத்தல் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்.சாதி பிரச்சனையை தூண்டும் விதமாக பேசும் கருணாஸ்,எம்.எல்.ஏ என்ற அடிப்படையில் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும்”. இவ்வாறு பேசினார்.