December 27, 2017
தண்டோரா குழு
ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் வெற்றிவேல் மனு தாக்கல் செய்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ காட்சிகளை டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் கடந்த 21-ம் தேதி வெளியிட்டார்.
இதனையடுத்து தேர்தல் ஆணையம் மற்றும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் வெற்றிவேல் மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில்,வெற்றிவேல் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இம்மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் அல்லது நாளை விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே முன்ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.