• Download mobile app
19 Dec 2025, FridayEdition - 3600
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாஜ்பாய் அஸ்திக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மரியாதை

August 23, 2018 தண்டோரா குழு

சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்திக்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமரும்,பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அடல் பிகாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால்,கடந்த 16-ம் தேதி காலமானார்.அவரது உடல்,17-ம் தேதி முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து,வாஜ்பாயின் அஸ்தி தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்கப்பட உள்ளது.இதற்காக,சென்னை கொண்டு வரப்பட்டுள்ள வாஜ்பாயின் அஸ்தி,தியாகராயநகரில் உள்ள பாஜகவின் மாநில தலைமை அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இன்று பாஜக தலைமை அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்திக்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மரியாதை செலுத்தினர்.

மேலும் படிக்க