August 23, 2018
தண்டோரா குழு
தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்துக்கு இன்று காலை நேரில் சென்று வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் பிரதமரும்,பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அடல் பிகாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால்,கடந்த 16-ம் தேதி காலமானார்.அவரது உடல், 17-ம் தேதி முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து,வாஜ்பாயின் அஸ்தி தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்கப்பட உள்ளது.இதற்காக,சென்னை கொண்டு வரப்பட்டுள்ள வாஜ்பாயின் அஸ்தி,தியாகராயநகரில் உள்ள பாஜகவின் மாநில தலைமை அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினார்.