October 10, 2018
தண்டோரா குழு
பாடகி சின்மயி கூறிய பாலியல் குற்றசாட்டு குறித்த ட்விட்டுக்கு கவிஞர் வைரமுத்து பதில் ட்விட் செய்துள்ளார்.கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அடுக்கடுக்கான பாலியல் குற்றசாட்டுகளை ட்விட்டர் முலம் முன் வைத்துள்ளார்.
அதில்,”கடந்த 2005 அல்லது 2006 ஆம் ஆண்டாக இருக்கலாம்.இலங்கை தமிழர் குறித்த ஒரு பாடல் ஆல்பத்திற்காக சுவிட்சர்லாந்து சென்றிந்தோம்.அந்நிகழ்ச்சி முடிந்து அனைவரும் சென்று விட்டனர்.என்னை காத்து இருக்குமாறு சொன்னார்கள்.நானும் எனது அம்மாவும் காத்து இருந்தோம்.பின்னர் அங்கு வந்த நிகழ்ச்சி எற்பாட்டாளர்கள் வைரமுத்து தங்கியுள்ள ஹோட்டல் அறைக்கு செல்லுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டனர்.நான் ஏன் என்று கேட்டேன்? அதற்கு அவருக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் எனக் கூறினார்.நான் மறுத்தேன்! அதற்கு அவர் உங்கள் கெரியர் வேண்டாமா என்று கேட்டார்? அதற்கு நானும் எனது அம்மாவும் கெரியரும் வேண்டாம்,மண்ணும் வேண்டாம் எனக் கூறிவிட்டு அங்கு இருந்து சென்று விட்டோம்”.
இந்நிலையில் பாடகி சின்மயின் ட்விட்டிற்கு வைரமுத்து பதில் ட்விட் செய்துள்ளார்.அதில்,”அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது.அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்;அவற்றுள் இதுவும் ஒன்று.உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை;உண்மையைக் காலம் சொல்லும்.” என்று பதிவிட்டுள்ளார்.