• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பயன்பாட்டில் இல்லாத விமான நிலையங்களைக் கண்டறிந்து சேவை தொடங்கப்படும்

September 28, 2016 தண்டோரா குழு

பிராந்திய விமான போக்குவரத்து சேவை விரைவில் தொடங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு தெரிவித்துள்ளார்.

பிராந்தியங்களுக்கிடையிலான விமான சேவை என்பது இரண்டு விமான நிலையங்களுக்கிடையே சேவை அளிப்பதாகும். இதில் ஒரு விமான நிலையத்தை மத்திய அரசும் மற்றொன்றை மாநில அரசும் தேர்வு செய்யும். குறைந்த விமான கட்டணத்தில் இத்தகைய சேவையை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஒருமணி நேரத்துக்கும் குறைவான விமான பயணத்துக்கு ரூ.2,500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு கூறும்போது,

பிராந்தியங்களுக்கிடையிலான விமான சேவை இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ தொடங்கப்படும் எனவும் இத்தகைய சேவை மூலம் உள்நாட்டு விமான போக்குவரத்து பயணிகள் பயன்பாட்டில் 20 சதவீத வளர்ச்சியை எட்ட முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

லும், இது தொடர்பாக பல்வேறு மாநில அரசுடன் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது எனவும் இது தொடர்பாக இந்திய விமான ஆணையம் பயன்பாட்டில் இல்லாத 20 விமான நிலையங்களைக் கண்டறிந்து அவற்றில் விமான சேவையைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது எனவும் தெரிவித்தார்.

விமானங்களை இயக்கும் விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்கும், மாநில அரசுகள் அந்த விமானங்களுக்குத் தேவையான காவல்துறை பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு வசதி உள்ளிட்டவற்றை இலவசமாக அளிக்ககும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க