December 4, 2017
தண்டோரா குழு
அமெரிக்க நாட்டின் வெள்ளை மாளிகையில் எலி, கரப்பான்பூச்சி,மூட்டை பூச்சி, எறும்புகள் தொல்லை உள்ளது என்று அதிகாரிகள் பராமரிப்பு ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளனர்.
அமெரிக்க அதிபரின் அதிகார பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் தனது குடும்பத்துடன் தங்கி இருக்கிறார்.தற்போது, அந்த மாளிகையில் எலி, கரப்பான்பூச்சி,மூட்டை பூச்சி, எறும்புகள் தொல்லை உள்ளது என்று அதிகாரிகள் பராமரிப்பு ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளனர்.
வெள்ளை மாளிகையில் உள்ள Navy Mess Food Service மற்றும் Situation Room ஆகிய இடங்களில் எலிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. வெள்ளை மாளிகை தலைமை பணியாளர் தங்கும் விடுதியின் உணவு அறை, மற்றும் பத்திரிக்கையாளர்கள் லாபி சமயலறையில் கரப்பான்பூச்சி மற்றும் எறும்பு தொல்லை உள்ளது. மேலும், டிரம்பின் நிர்வாக அறையில் 4 இடங்களில் கரப்பான்பூச்சிகளின் தொல்லை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை முழுவதும் பணிபுரியும் ஊழியர்கள் தரப்பில் இந்த ஆண்டில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட கோரிக்கைகள் விடுவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.