• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐநா-வில் முதல்முறையாக தீபாவளி கொண்டாட்டம்

October 31, 2016 timesofindia.indiatimes.com

ஐக்கிய நாடுகள் சபையில் முதல் முறையாக தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

ஐநா-வுக்கான இந்திய தூதர் சையது அக்பருத்தின் இதுகுறித்து தனது சுட்டுரையில் (ட்விட்டர்), “ஐக்கிய நாடுகள் சபையில் முதல்முறையாக தீபாவளிக்கான தீபச்சுடர்கள் மிக அழகாக மின்னுகின்றன. மேலும், ஐநா-வில் முதல் முறையாக தீபாவளியைக் கொண்டாட முயற்சி எடுத்ததற்காக ஐநா பொதுச்சபையின் தலைவர் பீட்டர் தாம்சனுக்கு மனமார்ந்த நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒளி விளக்குகளுடன் அழகு ஜோதியாக மின்னும் அந்தக் கட்டடத்தை மக்கள் படம் பிடிப்பதையும், ஒளிவீசும் கட்டடத்தின் பின்னணியுடன் தங்களைப் படம் பிடித்துக் கொள்வதையும் தனு டுவிட்டர் அதன் அருகில் நின்று தங்களை புகைப்பிடிப்பதையும் இந்தியத் தூதர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இருள் விலகி வெளிச்சம் பரவவும், விரக்தி நிலை மாறி நம்பிக்கை துளிர்விடவும், அறியாமை நீங்கி அறிவு நிறையவும், தீமை ஒழிந்து நன்மை பிறக்கவும் ஐநாவில் தீப ஒளி ஏற்றப்பட்டுள்ளது. ஐ.நா.கட்டடம் கண்ணைப் பறிக்கும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி நாளான அக்டோபர் 29-ம் தேதி தொடங்கி, திங்கள்கிழமை (அக். 31) வரை ஐநா கட்டடம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தீபாவளித் திருநாளின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், ஐநா பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐநாவின் உறுப்பினர் நாடுகள்

பலவற்றில் இப்பண்டிகை கொண்டாடப்படுவதால், அன்றைய தினத்தில் அலுவல் கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தப்பட்டது.

இந்த ஆண்டு முதல், தீபாவளியன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, முதல்முறையாக தீபாவளியைக் கொண்டாடும் விதமாக ஐநா தலைமையக கட்டடத்தில் தீபாவளி வாழ்த்துச் செய்தியுடன், தீப விளக்கு எரியும் படத்துடன் கூடிய அலங்காரம் செய்யப்பட்டிருந்தது என்று ஐநா பொதுச்சபையின் தலைவர் பீட்டர் தாம்சன் தெரிவித்தார்.

ஐநா தலைமையகம் மட்டுமின்றி, டெல்லி உட்பட பல்வேறு இடங்களில் உள்ள ஐநா அலுவலகங்களிலும் தீபாவளி பண்டிகையின் உற்சாகம் வெளிப்பட்டது. கடந்த ஜூன் மாதம், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டும், ஐநா தலைமையகக் கட்டடம் யோகாசன படங்களுடன் அலங்கரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க