• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – சென்னை போக்குவரத்து காவல்துறை

August 25, 2018 தண்டோரா குழு

இருசக்கர வாகனம் ஓட்டுபவரும்,பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணியாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இருசக்கர வாகனங்களை ஓட்டுவோரும்,பின்னால் பயணிப்போரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்றும், காரில் செல்வோர் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்ற உத்தரவுகள் செயல்படுத்தப்படவில்லை எனவும் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அதில்,ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள் மீது மட்டும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்ததாகவும்,பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினர்.

இதையடுத்து, இந்த வழக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது,இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணிப்போருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்பது கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என்றும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்திருந்தது.

இந்நிலையில்,இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர் ஹெல்மெட் அணியாவிடில் வாகனம் ஓட்டுபவர்,பயணிப்பவர் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க