• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டுவிட்டரில் ட்ரெண்டான ரஜினி சொன்ன ஒரு வார்த்தை!

January 5, 2018 தண்டோரா குழு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சொன்ன ஒரு வார்த்தை இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31ம் தேதி ரசிகர்கள் சந்திப்பின் போது தான் அரசியலுக்கு வருவது உறுதி எனவும்,அதுவே காலத்தின் கட்டாயம் எனவும் அறிவித்தார். இந்த அறிவிப்பை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதற்கிடையில்,ரஜினி அரசியல் அறிவிப்பை தெரிவிக்கும் முன்பு தான் அரசியலைப் பார்த்துபயப்படவில்லை.ஆனால், ஊடகவியலாளர்களைப் பார்த்து பயப்படுகிறேன் என்று தெரிவித்தார்.

மேலும், நிருபர்கள் கேட்ட கேள்விக்கு “எனக்கு ஒரு நிமிஷம் தலை தலைசுத்திருச்சு” என்று கூறினார். அதனையடுத்து, ரஜினிகாந்த் பயன்படுத்திய “எனக்கு ஒரு நிமிஷம் தலை தலைசுத்திருச்சு” என்ற வார்த்தை சமூக வலைதளங்களில் வைரலானது.

அந்த வார்த்தைகளை பயன்படுத்தி, அதைவைத்து உருவாக்கப்பட்ட மீம்களும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதனால், ட்விட்டரில் #ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேகில் மீம்களை சமூகவலைதளவாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் படிக்க