November 20, 2017
தண்டோரா குழு
தமிழ் சினிமாவில் கடந்த 15 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் த்ரிஷா. கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். அது மட்டுமின்றி அவர் பெண்கள் முன்னேற்றம், விலங்குகள் நலம் பற்றிய சில அமைப்புகளிலும் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், குழந்தைகள் உரிமைக்கான யுனிசெப்பின் தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கான நல்லெண்ண தூதராக த்ரிஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்னிந்தியாவில் இந்த கெளரவத்தை பெறும் முதல் நடிகை திரிஷா தான் என்பதால் இதற்காக சமூகவலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
மேலும், இந்த அமைப்பு சென்னையில் நடத்தவுள்ள குழந்தைகள் தின விழாவில் த்ரிஷா கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.