August 15, 2018
தண்டோரா குழு
திருப்பூரில் கடந்தாண்டு 27ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த வர்த்தகம்,ஜி.எஸ்.டி.யினால் இந்தாண்டு 23ஆயிரம் கோடி ரூபாய் வரத்தகமாக குறைந்துள்ளதாகவும்,ஜி.எஸ்.டி.யில் மேற்கொள்ள வேண்டிய சில திருத்தங்களை முன்வைத்து வரும் ஆகஸ்ட் 19ம் தேதி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் எஸ்.டி.பி.ஐ. சார்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை போத்தனூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் நெல்லை முபாரக்,
“எஸ்.டி.பி.ஐ. துவங்கப்பட்டு 10ஆண்டுகள் அடியெடுத்து வைத்துள்ள நிலையில்,திருச்சியில் அக்டோபர் 21ம் தேதி மாநில மாநாட்டை நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும்,இந்த மாநாட்டிற்கு எஸ்.டி.பி.ஐ.கட்சிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் தனியார் நாளிதழுக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்தபோது,மத்திய அரசின் நல்ல திட்டங்களை சீர்குழைக்க சில அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டியதற்கு கண்டனம் தெரிவித்தார்.
தமிழகத்தில் தற்போது நடைபெறும் போராட்டங்கள் வாழ்விடத்திற்கான,நீராதாரங்கள் வேண்டி, இயற்கை வளத்திற்காக அந்தந்த பகுதியை சார்ந்த மக்கள் பாதிக்கப்பட்டதால் தன்னெழுச்சியாக நடத்தப்படும் போராட்டம் தவிர வெளியிலிருந்து வருபவர்களால் போரடப்படுவது இல்லை என்றார்.
மாநில மக்களுக்கு எதிராக,மாநில மக்களின் போராட்டங்களுக்கு எதிராக பிரதமர் என்ற அடிப்படையில் இவ்வாறு கருத்து சொல்வது நியாயமில்லை.தூத்துக்குடி போராட்டம் மற்றும் துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஜெனிவாவில் ஐ.நா. அமைப்பில் பேசிவிட்டு திரும்பி வந்த போது,கைது செய்யப்பட்ட மே 17இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உடனே விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும்,அவர் மீதான வழக்கை ரத்து செய்யப்பட வேண்டும் என்றார்.
மாநில,மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக குரல் எழுப்புபவர்கள்,அமைப்புகள் மீது பொய்யான வழக்கை போட்டு,சிறையில் அடைப்பதை வாடிக்கையாக்கி வருவதாகவும்,இதுபோன்று நடவடிக்கையினால்,வழக்குகளால் போராட்டங்களை நிறுத்தி விட முடியாது என்பதும்,இதுபோன்ற குரல்களுக்கு மதிப்பதிமளிப்பதே ஜனநாயக அரசு என்பதை தமிழக அரசு நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.
50ஆண்டுகள் இல்லாத வகையில் கேரள அரசை பேரிடர் பாதித்துள்ளதை அடுத்து,வரும் வெள்ளிக்கிழமைக்குள் 50 லட்சத்திற்கும் அதிகமான நிவாரண பொருட்கள் தமிழகத்திலிருந்து கேரள மக்களுக்கு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பேற்பு நிகழ்ச்சியின் போது,தமிழக உயர் நீதிமன்ற,உச்ச நீதிமன்ற நீதிபதிகள் படிநிலை புறக்கணிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக தமிழக முழுவதும் அரசின் செயல்பாட்டை ஆய்வு மேற்கொள்ளும் ஆளுநர், தனது அலுவலகத்திலேயே ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
திமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி விவகாரம் விரைவில் முடித்துவிடப்பட வேண்டும் என்றும்,தமிழக பணிக்கு திராவிட பணி இன்றியமையாதது என்பதால் வலுவான கட்சியாக,அணியாக தமிழக மக்களுக்கு பணியாற்ற ஸ்டாலின் தலைமையில் எழுச்சியோடு திமுகவினர் புறப்பட வேண்டும்”. இவ்வாறு பேசினார்