August 24, 2018
தண்டோரா குழு
திருச்சி முக்கொம்பு மேலணையில் வெள்ளத்தில் உடைந்த 9 மதகுகளை தமிழக முதலமைச்சர் பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதலமைச்சர் பழனிசாமி,
“திருச்சி முக்கொம்பில் மதகுகள் உடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.அதிக அளவில் வெள்ள நீர் வெளியேறியதால் அழுத்தம் காரணமாக பழமையான அணையின் மதகு உடைந்துள்ளது.
மதகுகள் உடைந்த மேலணைக்கு பதில் ரூ.325 கோடியில் புதிய கதவணை கட்டப்படும்.கொள்ளிடத்தின் வடக்குப்பகுதியில் உள்ள அய்யன்வாய்க்காலிலும் ரூ.85 கோடியில் கதவணை கட்டப்படும்.திருச்சி முக்கொம்பு மேலணையில் 9 மதகுகள் உடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணி 4 நாட்களில் முடியும்.புதிய கதவணை பணி விரைவில் தொடங்கி 15 மாதங்களில் கட்டி முடிக்கப்படும்.
மேலும்,முக்கொம்பு மேலணையில் மதகுகள் உடைந்ததிற்கும் மணல் அள்ளியதற்கும் எந்த தொடர்பும் இல்லை. மேலணையில் இருந்து வெகுதொலைவில் உள்ள குவாரியில் தான் மணல் அள்ளப்படுகிறது”.என்றார்.இந்த ஆய்வின் போது முதலமைச்சருடன் அமைச்சர்கள் காமராஜ்,துரைகண்னு,வெல்லமண்டி நடராஜன்,வளர்மதி ஆகியோர் உடனிருந்தனர்.