• Download mobile app
21 Jan 2026, WednesdayEdition - 3633
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருச்சியில் விவசாயிகள் நூதன போராட்டம்

September 9, 2016 தண்டோரா குழு

தமிழக விவசாயிகளுக்கு உதவி புரியாத மத்திய அரசைக் கண்டித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் உரிய நீரை வழங்காத கர்நாடக அரசைக் கண்டித்தும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வாழ்வாதாரமாக விளங்கும் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் குருவை சாகுபடிக்கு நீர் திறக்கப்படவில்லை. மேலும் தற்போது கர்நாடகாவில் இருந்தும் நீர் திறக்கப்படாததால் சம்பா சாகுபடியும் சந்தேகத்திற்கு இடமாக உள்ளது.

இதையடுத்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் நீர் திறக்க உத்தரவிட்டபின்னும் நீரைத் திறக்க மறுத்து வரும் கர்நாடக அரசைக் கண்டித்து இன்று வித்தியாசமான போராட்டம் ஒன்றை நடத்தினர்.காலை திருச்சி காவிரி ஆற்றில் உள்ள மணல் பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட சங்கத்தினர் குழி தோண்டி அதில் படுத்துக்கொண்டு மரணக்குழியில் படுக்கும் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து செல்ல மறுத்ததால் அனைவரையும் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

மேலும் படிக்க