• Download mobile app
25 Oct 2025, SaturdayEdition - 3545
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போக்குவரத்து ஊழியர்கள் பிச்சையெடுத்து போராட்டம்

December 2, 2016 தண்டோரா குழு

அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு நிர்வாகம் தவணை முறையில் ஊதியம் வழங்குவதாகக் கூறி, கண்டித்து போக்குவரத்துத் தொழிலாள ர்கள் பிச்சையெடுக்கும் போராட்டத்தை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என்ற அறிவிப்பை அடுத்து, பணத் தட்டுப்பாடு ஏற்பட்டதன் விளைவாக அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு முழு ஊதியத்தை வழங்காமல் மூவாயிரம் ருபாய் ரொக்கத்தை கையிலும் ஒரு பகுதி சம்பளத்தை வங்கியிலும் செலுத்தியுள்ளனர்.

மீதி ஊதியம் சில தினங்கள் கழித்தே தரப்படும் என நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மத்திய அரசைக் கண்டித்தும் உரிய முன்னேற்பாடுகள் செய்யாத மாநில அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும் கோவை கோட்டத்திற்குட்பட்ட அனைத்துப் பணிமனைகளிலும் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒருபகுதியாக கோவை சுங்கம் பணிமனையின் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சம்மேளன துணைத் தலைவர் ப. காளியப்பன் தலைமை தாங்கினார்.

“இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள் மாதம் முழுவதும் உழைத்த தொழிலாளர்கள் தவனை முறையில் ஊதியம் தருவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும், வீட்டு வாடகை, மருத்துவம், கல்விச் செலவு உள்ளிட்டவற்றைச் செய்ய முடியாமல் தவிக்கிறோம்.

பிச்சையெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை” எனக் கூறி பிச்சையெடுக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக கோவை கோட்டத்திற்குட்பட்ட அனைத்து பணிமனைகளின் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க