• Download mobile app
20 Oct 2025, MondayEdition - 3540
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போதை மருந்து சர்ச்சையில் நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன், இந்திய மல்யுத்த வீரர் நரசிங் யாதவ்

August 19, 2016 தண்டோரா குழு

போதை மருந்து சர்ச்சையில் சிக்கிய மல்யுத்த வீரர் நரசிங் யாதவ், 4 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால், அவரது ஒலிம்பிக் மல்யுத்த கனவு முடிவுக்கு வந்தது.

இது தொடர்பாக நரசிங் யாதவ் கூறுகையில், இந்த முடிவு காரணமாக நான் சீர்குலைந்து போயுள்ளேன்.கடந்த இரண்டு மாதமாக மனக்கஷ்டத்தில் இருந்த நான், நாட்டிற்காக விளையாடுவது என்ற எண்ணம் என்னை ஊக்கப்படுத்தியது.

ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காகப் பதக்கம் வெல்வது என்ற எனது கனவு, எனது முதல் போட்டி துவங்கும் 12 மணி நேரத்திற்கு முன் பறிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் நான் நிரபராதி என்பதை நிரூபிக்க என்னாலான முயற்சிகளை மேற்கொள்வேன். இதற்காக நான் போராட உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க