• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நதிநீர் இணைப்பை வலியுறுத்தி கோவையில் இருசக்கர வாகன பேரணி

September 18, 2016 தண்டோரா குழு

நதிநீர் இணைப்பை வலியுறுத்தி கோவையில் வேர் என்ற தன்னார்வ அமைப்பின் சார்பில் இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக கர்நாடக மாநிலங்களில் போராட்டங்களும் வன்முறை சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் இது போன்ற பிரச்சினைகளுக்கு ஓரே தீர்வு நதி நீர் இணைப்பு மட்டுமே என வலியுறுத்தி கோவையில் வேர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் இன்று இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.கோவை கொடிசியா மைதானத்தில் துவங்கி விளாங்குறிச்சி வழியாக பல்வேறு முக்கிய சாலைகளில் வழியாக சென்று இப்பேரணி மீண்டும் கொடிசியா மைதானத்திலேயே முடிவடைந்தது.

இந்த இரு சக்கர வாகன பேரணியின் போது, நதி நீர் இணைக்கப்படுவதால் விவசாயம் வளரும் என்பதுடன் பசுமை இந்தியாவாக மாறும் எனவும் மற்ற மாநிலத்தவரை போல வன்முறைகளை கையாளாமல் மனித தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்த பேரணியை நடத்துவதாகவும் அதன் ஓருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், மத்திய,மாநில அரசுகள் நதி நீர் இணைப்பை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.இந்த விழிப்புணர்வு பேரணியில் கோவை,ஈரோடு,திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க