• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுக ஆட்சியிலும்,கட்சியிலும் சரியில்லை – திருநாவுக்கரசர்

August 29, 2018 தண்டோரா குழு

இரட்டை குதிரையில் இரட்டை படகில் சவாரி செய்ய முடியாது என்றும்,அவ்வாறு ஆட்சியில் ஒருவர் கட்சியில் ஒருவர் என இருவர் தலைவர் பொறுப்பில் உள்ளதால் அதிமுக ஆட்சியிலும்,கட்சியிலும் சரியில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“பஞ்சாயத்து செய்ய வேண்டிய நிலையில் முதல்வர் உள்ளதாகவும்,அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சி உடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.50 ஆண்டுகள் பொதுவாழ்விலும்,பல பொறுப்புகளில் கட்சியிலும் இருந்து ஏகமனதாக திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்டாலின் குறித்து அமைச்சராக ஒரு தகுதியை வைத்துக்கொண்டு தரம் தாழ்ந்து பேசுவது ஏற்புடையதில்லை என ஸ்டாலினிற்கு திமுகவின் தலைவராக தகுதியில்லை என அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.

சண்டையிட்டால் தான் வீழ்த்த முடியும் என்றும்,பாஜக ஏற்கனவே வீழ்ந்து தான் உள்ளதாகவும், தமிழகத்தில் இப்பவும்,எதிர்காலத்திலும் வாய்ப்பு கிடையாது என்று மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் கருத்துக்கு பதிலளித்தார்.

மக்களவைத் தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றிப்பெறுவோம் என பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதற்கு,கர்நாடக உள்ளிட்ட அண்டை மாநிலங்களையும் சேர்த்து 80 தொகுதியிலும் வெற்றிப்பெறுவோம் என சொல்லட்டும்.ஆனால் அதற்கு வாய்ப்பு கிடையாது என சாடியவர்,நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் பார்த்துக்கொள்வதாகவும்,இளங்கோவன் அவர் எதிர்காலத்தை பற்றி முடிவு செய்யட்டும் என்றும்,அவர் இப்படி பேசுவது வழக்கமானதாயிற்று என்றார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேரளாவில் இரண்டு நாட்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் தெரிவித்து,கோவை விமான நிலையம் வந்து டெல்லி செல்வதாக கூறியவர்,திடீரென கேரளாவில் மற்றொரு மாவட்டத்திற்கு செல்வதால், ராகுல் காந்தி கட்சி நிர்வாகிகளை சந்திக்கவும், வெளியே வர வாய்ப்பில்லை என்றார்”.

மேலும் படிக்க