• Download mobile app
21 Oct 2025, TuesdayEdition - 3541
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அத்துமீறி தாக்குதல்

October 6, 2016 தண்டோரா குழு

ராமேஸ்வரத்தை சேர்ந்த பல மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை அவர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

இலங்கை கடற்படையின் தாக்குதலால் நிலைகுலைந்து போன மீனவர்கள் செய்வதறியாமல் தவித்தனர். மேலும் இலங்கை கடற்படை கப்பலால், ஆரோக்கிய குருஸ் என்பவருக்கு சொந்தமான படகின் மீது மோதி கடலில் மூழ்கடிக்கப்பட்டது.

நடுக்கடலில் ஆபத்தான நிலையில் தத்தளித்த மீனவர்களை சக மீனவர்கள் மீட்டு மற்றொரு படகில் கரைக்கு கொண்டு வந்தனர். இதனால் மீனவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு மீனவ சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க