August 2, 2018
தண்டோரா குழு
மதுரையில் காலமான அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ஏ.கே.போஸ் மாரடைப்பால் நேற்றிரவு காலமானார்.கடந்த 2016-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஏ.கே.போஸ்(69).கடந்த ஓராண்டாக உடல் நலக்குறைவால் இருந்த ஏ.கே.போஸ்க்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கால் மூட்டு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில்,ஏ.கே.போஸ்க்கு நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரது மரணத்திற்கு அரசியல் கட்சித் தலைவா்கள் பலரும் இரங்கல் தொிவித்து வருகின்றனா்.
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீா் செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன்,ஆர்.பி.உதயகுமார்,செல்லூர் ராஜூ,காமராஜ் உள்ளிட்டோரும் போஸ் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினா்.