• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உள்ளாட்சித் தேர்தலில் தமாகா தனித்துப் போட்டி: ஜி.கே.வாசன்

September 27, 2016 தண்டோரா குழு

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட போவதாக அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ” நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நிலவிய சூழ்நிலை காரணமாக ஒரு நல்ல நாகரிகமான, மக்கள் நலன் சார்ந்த மாற்று அரசியலை தமிழகத்தில் நிறுவ வேண்டும் என்பதற்காக ஒரு நல்ல கூட்டணியை அமைத்து தேர்தலை சந்தித்தோம்.அதற்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருந்த போதிலும், தமாகா லட்சியங்களை மக்கள் மனதில் பதியவைக்க போதிய கால அவகாசம் இல்லாத காரணத்தால் வெற்றிவாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் தேர்தல் தோல்விக்கு பிறகு சிறிதளவும் மனம் தளராமல் த.மா.கா தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும் மாவட்ட வாரியாக கூட்டங்கள் நடத்தினர்.
நானும் அனைத்து கூட்டங்களிலும் கலந்து கொண்டேன் என்றும் இத்தகைய சூழ்நிலையில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.இந்த தேர்தலுக்காக மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களின் விருப்பதுக்கேற்ப ஒரு முயற்சியில் ஈடுபட்டோம் என்றார்.

மேலும்,உள்ளாட்சித் தேர்தல் களத்தை தனித்தே சந்திக்க வேண்டும் என்பதற்காக கடந்த மூன்று மாதங்களாக கடின உழைப்பை மேற்கொண்டோம்.அதன் அடிப்படையில் தற்போது தனித்தே தேர்தலை சந்திக்கக் கூடிய ஒரு நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது என குறிபிட்டுள்ள அவர் உள்ளாட்சித் தேர்தலில் மாவட்டம் தோறும் வெற்றி வாய்ப்புகள் உள்ள இடங்களில் தகுந்த வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து, நிறுத்தி நாம் அனைவரும் முழு பலத்தோடு உழைத்து அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.இதற்காக நானும் முன்னணி தலைவர்களும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உள்ளாட்சி தேர்தலை தனித்து சந்திப்பதற்கான ஆயத்தப் பணிகள் த.மா.கா சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்ப படிவங்கள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன. வேட்பாளர் பட்டியல் சம்பந்தமான ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. விரைவில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் ” என வாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க