• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இடைக்கால தடையை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஹென்றி

February 2, 2017 தண்டோரா குழு

சென்னை உயர் நீதிமன்றத்தின் வீட்டுமனை விற்பனைகள் மீதான இடைக்கால தடையை நீக்குவதற்கு தமிழக அரசு சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் சங்க தேசிய தலைவர் ஹென்றி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கோவையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் வியாழக்கிழமை கூறியதாவது; “சென்னை உயர் நீதிமன்றம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம், அங்கீகாரம் இல்லாத பட்டா நிலத்தில் கட்டியுள்ள வீடு மற்றும் வீட்டுமனைப் பிரிவுகளை இனிமேல் பத்திர பதிவு செய்வதற்கு இடைக்கால தடை என உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு மிகப்பெரும் அளவில் வருவாய் ஈட்டித் தரும் இரண்டாவது பெரிய துறையான பத்திரப் பதிவுத் துறைக்கு பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.

அதுமட்டுமல்ல அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகளை வாங்கி வீடு கட்டியவர்கள் இனிமேல் அவசர தேவைக்கு மறு விற்பனை செய்ய இயலாது. கட்டுமானத்துறை சார்ந்த தொழில்கள் வீழ்ச்சி அடைவதோடு, இதனை நம்பி இருக்கும் பல லட்சம் குடும்பங்கள் நிரகதயாய் நிற்க நேரிடும்.

ஆகவே தமிழக அரசு இதில் விரைந்து நடவடிக்கை எடுத்து வீட்டுமனை பிரிவுகளையும், வீடுகளையும் மறுபதிவு செய்ய ஆவண செய்ய வேண்டும்.

சென்னை நீதிமன்றத்தின் இந்த இடைக்கால தடை உத்தரவு மீதான வழக்கு விசாரணை வரும் 27.02.2017 அன்று விசாரணைக்காக வருகிறது. இந்த இடைக்கால உத்தரவை நீக்குவதற்கு தமிழக அரசு சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்”.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க