• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குழந்தையை 14 முறை கத்தியால் குத்தி உயிருடன் புதைத்த தாய்

October 11, 2016 தண்டோரா குழு

தாய்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் பிறந்த குழந்தையை 14 முறை கத்தியால் குத்தி அதை உயிரோடு புதைத்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தின் கோன் காயன் மாகாணத்தில் பிறந்த சில நாட்களே ஆன ஒரு ஆண் குழந்தையை அதனுடைய தாய் குழந்தையை சுமார் 14 முறை கத்தியால் குத்தி உயிருடன் புதைத்துள்ளார். குழந்தை புதைக்கப்பட்ட சிறிது நேரத்திற்கு பிறகு அவ்வழியாக கால்நடைகளை மேய்க்கும் பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது, குழந்தையின் அழுக்குரல் சத்தம் கேட்டு தேடியுள்ளார்.

பின்னர், ஒரு மரத்தின் கீழே மண்ணில் புதைக்கப்பட்டு இருந்த நிலையில் குழந்தை பிஞ்சு கால்கள் தெரிந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பெண் தோண்டி குழந்தையை வெளியே எடுத்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் காவல்துறையினரிக்கு தகவல் அளித்துள்ளார்.

மருத்துவ சக்தி நிறைந்த யுகாலிக்ஸ் மரத்தின் அடியில் குழந்தை புதைகப்பட்டிருந்ததால் அம்மரத்தின் மண் அழுத்தத்தின் காரணமாக அக்குழந்தைக்கு அதிக இரத்தப்போக்கு ஏற்படவில்லை என்றும் குழந்தையின் வயிற்றில் ஏற்பட்டுள்ள காயங்கள் அதற்கு உடல் முறைகேடு நேர்ந்ததால் ஏற்பட்டவை என்றும் மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து, இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் குழந்தையின் தாயை தேடிவருகின்றனர்.

இந்நிலையில், ஆதரவின்றி இருந்த அக்குழந்தையை காயன் தாங் என்னும் அனாதை இல்லத்தில் பாதுகாப்பாக இருக்கும்படியாக அனுப்பி வைக்கப்பட்டது. அனாதை இல்லத்தில் உள்ள மக்கள், குழந்தைக்கு ஐதின் என்று பெயர் வைத்துள்ளனர். மேலும், ஐதினை ஸ்வீடன் நாட்டை சேர்ந்த தம்பதியினர் தத்து எடுக்க முன்வந்துள்ளதாக அனாதை இல்ல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், உள்ளூர் மக்களின் உதவி மற்றும் குற்றம் நடந்த இடத்தில் கிடைத்த ஆதாரங்களை வைத்து ஐதீனின் உண்மையான தாயை காவல்துறையினர் கண்டுப்பிடித்துள்ளனர். மேலும், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க