December 19, 2017
தண்டோரா குழு
மும்பையில் இருந்து 300 மைல் தொலைவில் கடலில் தத்தளித்த 10 தமிழக மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தை ஓகி புயல் புரட்டி போட்டது. புயல் நேரத்தில் மீன் பிடிக்க சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களை காணவில்லை என அவர்களது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.இதற்கிடையில், ஓகி புயலில் சிக்கி 433 தமிழக மீனவர்கள், கேரளாவின் 186 மீனவர்கள் என மொத்தம் 619 பேர் மாயமாகி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மும்பையில் இருந்து 300 மைல் தொலைவில் கடலில் தத்தளித்த 10 தமிழக மீனவர்களை குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் மீட்டனர்.ஓகி புயலில் மாயமான 10 பேரை 18 நாட்களுக்கு பின், அதே ஊரை சேர்ந்த மீனவர்கள் மீட்டனர்.
ஒக்கி புயலின்போது, படகு கவிழாமல் இருக்க தார்ப்பாலின் பாராசூட் மூலம் காத்துக் கொண்டதாக மீனவர்கள் கூறியுள்ளனர்.இதனால் மீட்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.