• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நாளை முதல் துவக்கம்

January 3, 2018 தண்டோரா குழு

கோவில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் மேட்டுப்பாளையத்தில் நாளை(ஜன 4) முதல் துவங்கவுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் கோவில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நாளை துவங்க உள்ள நிலையில் இன்று அதிகாலை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லாரிகள் மூலம் யானைகள் வரத்துவங்கின.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றின் கரையோரமுள்ள தேக்கம்பட்டி என்னுமிடத்தில் தமிழக அரசு சார்பில் கோவில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் நாளை துவங்கவுள்ளது. மேட்டுப்பாளையத்தில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக துவங்கவுள்ள இம்முகாம் 48 நாட்கள் நடைப்பெறவுள்ளது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து கோவில்கள் மற்றும் மடங்களுக்கு சொந்தமான 34 யானைகள் பங்கேற்க உள்ளன.

இந்த நலவாழ்வு முகாமில் பங்கேற்கும் கோவில் யானைகள் அனைத்தும் முதலில் அதன் எடை பார்க்கப்பட்ட பின்னரே முகாமிற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. யானைகளின் வயதிற்கு ஏற்ற வகையில் அதன் எடை உள்ளதா என கணக்கிட்டு அதற்கேற்றவாறு முகாம் நாட்களில் அவற்றின் எடையை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முகாமில் உள்ள கால்நடை மருத்துவ குழுக்களால் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள முகாமிற்கு முதலாவதாக வருகை தந்துள்ள திருக்கடையூர் கோவில் யானை அபிராமி மற்றும் மயிலாடுதுறை கோவில் யானை அபிலாம்பாள் யானைகள் ஆகியவையை லாரிகளில் இருந்து இறக்கப்பட்டு முகாமிற்குள் சென்றுள்ள நிலையில் மேலும் பல யானைகள் ஒவ்வொன்றாக வந்தபடி உள்ளன. இன்று இரவுக்குள் இம்முகாமில் பங்கேற்கும் அனைத்து யானைகளும் வந்துவிடும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க