October 24, 2018 
தண்டோரா குழு
                                கோவை காமராஜபுரம் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி,எம்.எல்.ஏ. விற்கு கருப்பு கொடி காட்ட முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்
கோவை காமராஜபுரம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் இயங்கிவரும் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி,அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் அதிமுகவின் 47 வது ஆண்டு விழா நடைபெற்றது.இதில் பங்கேற்க கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் கே.அர்ஜூனன் வர இருந்தார்.அம்மன் கே.அர்ஜூனனுக்கு கருப்பு கொடி காட்ட,பாஜகவினர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதையடுத்து போராட்டம் நடத்திய 50 க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.