• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தின் தற்போதைய சூழ்நிலை என்ன? மக்களின் குரல்

June 4, 2018 ஷாலினி சுப்பிரமணியம்

சமுதாயத்தில் மாற்றம் என்பது எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒன்று.தற்போது தமிழகத்தில் மக்கள் தினந்தோறும் பல பிரச்சனைகளையும்,வன்முறைகளையும் சந்தித்து வருகின்றனர்.ஆனால் சமுதாயத்தில் மனிதா்கள் சூழ்நிலைக்கு ஏற்ற தங்களை தகவமைத்து கொண்டால் தான் அவர்களால் வாழ முடியும் என்பது நிதர்சனமான உண்மை.இப்போது தமிழக மக்களின் நிலையும் இப்படி தான்.

இது குறித்து சமூக ஆர்வலர் மனோஜ் கூறுகையில்,

தற்போதுள்ள தமிழகம் மக்களுக்கான தமிழகம் இல்லை.இது அரசியல்வாதிகளுக்கான களம்.இந்த நாள் எப்படி இருக்கும்,என்ன ஆகப்போகிறது என்று மக்கள் பயத்துடன் வாழவேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.தமிழகத்தில் திரும்பிய திசையெல்லாம் போரட்டம்,வன்முறை,கொள்ளை,கொலை போன்ற அமைதியற்ற நிலை இருக்கிறது.ஆனால்,இதை காக்க வேண்டிய காவல் துறையினர் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது.நடப்பவை எல்லாம் வைத்து பார்க்கும் போது “காவல் துறை மக்களின் நண்பன்” என்று கூறுபவை எல்லாம் வெறும் வார்த்தைகள் தான்.இது ஸ்டெர்லைட் பிரச்சனையில் இருந்தே தெரிகிறது.99 நாள் தூத்துக்குடி மக்கள் தங்கள் அடிப்படை உரிமையை கேட்டு போராடியதற்கு,100வது நாள் தூத்துக்குடி மக்களுக்கு கிடைத்த பலன் 13 மனிதர்களின் விலை மதிப்பற்ற உயிர்.

காலங்காலமாக ஆளும்கட்சி எதிர்கட்சிகளை குற்றம் சாற்றுவதும்,எதிர்கட்சி ஆளும்கட்சிகளை குற்றம் சாற்றுவதும் வழக்கமான ஒன்று தான்.இத்தனை நாட்கள் தூத்துக்குடி மக்கள் வெயிலிலும்,மழையிலும் போராடிய போது வராத ரஐினியும்,கமலும் இப்போது ஏன் இங்கே வந்தார்கள்?ரஜினி எல்லாம் டைரக்டர் எழுதி கொடுப்பதை பார்த்து படிப்பவர் இவர்களுக்கெல்லாம் மக்களின் கஷ்டம் பற்றி என்ன தெரியும்?.இவர்கள் இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்.
தமிழகத்தில் ஒரு நல்ல மாற்றம் தேவை.நல்ல ஊழல் அற்ற சமுதாயம் உருவாக இளைஞர்கள் பாடுபட வேண்டும்.

இது குறித்து கல்லூரி மாணவர் சுரேஷ் கூறுகையில்,

தமிழகத்தில் என்ன நடந்தது,என்ன நடக்கிறது என்று ஒன்னும் புரியவில்லை.தமிழகத்தில் எப்படிப்பட்ட அசம்பாவிதம் நடந்தாலும், பணக்காரர்கள் தப்பித்து கொள்கிறார்கள் கடைசியில் எங்களை போன்ற ஏழை, எளிய மக்களே பாதிக்கப்படுகிறார்கள்.தமிழகத்தில் ஸ்டெர்லைட்,நீட் மற்றும் நெடுவாசல் போன்ற எத்தனையோ பிரச்சனைகள் நடந்துகொண்டிருக்கிறது.அதற்கெல்லாம் சட்டசபையில் பேசி தீர்வு காணாமல்,சட்டசபையை எதிர்கட்சிகள் புறக்கணிப்பதால் எந்த வித பயனும் இல்லை.இதனால் பாதிக்கப்பட போகின்றது பொதுமக்கள் தான்.

இது குறித்து கல்லூரி மாணவி திவ்யா கூறுகையில்,

ஒரு நாட்டின் வளர்ச்சியையும்,தளர்ச்சியையும் தீர்மானிப்பது அரசாங்கம் தான்.ஆனால்,அரசாங்கம் மக்களின் நலனில் அக்கறை காட்டாமல்,மெத்தனமாக செயல்படுகின்றனர்.தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு பிரச்சனையை தொடர்ந்து,அனிதா தற்கொலை,விவசாயிகளின் தொடர் போராட்டம் மற்றும் பேருந்துகளின் விலையேற்றம் என்று பிரச்சனைகள் அணி வகுத்துக்கொண்டே செல்கிறது.இப்போது தமிழ்நாட்டு மக்களின் நிலையே கேள்விக்குறியாக உள்ளது.

மேலும் தமிழகத்தின் தற்போதைய நிலை குறித்து சந்தியா கூறுகையில்,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் பிரச்சனை தமிழ்நாடு மட்டுமல்ல லண்டன் வரை தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு கொடூர சம்பவம்.லண்டனில் உள்ள தமிழர்கள் தூத்துக்குடி மக்களுக்காக ஸ்டெர்லைட் ஆலையத்தின் தலைவர் அனில் அகர்வால் வீட்டின் முன்பாக போராட்டம் நடத்தி தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.ஆனால் இந்தியாவின் பிரதமர் மோடியோ,தமிழ்நாட்டின் முதலமைச்சர் பழனிசாமியோ அவர்களுக்கு ஒரு ஆறுதல் கூட கூறவில்லை.இதிலிருந்ததே தெரிகிறது நம் தமிழ்நாட்டின் தற்போதைய நிலை என்னவென்று தெரிகிறது.எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை,கற்பழிப்பு என்ற வார்த்தைகளை தான் கேட்க முடிகிறது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னிருந்ததே தமிழகத்தின் ஒரு சரியான ஆட்சி நடந்த மாதிரி தெரியவில்லை!

முந்தைய தலைமுறையை விட,இன்றைய தலைமுறை ஓரளவுக்கு அரசியல் மற்றும் சமூக புரிதல்களோடு இருக்கிறது என்பது தெரிகிறது.

மேலும் படிக்க