August 13, 2018
தண்டோரா குழு
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் இதர பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் இதர பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னையை பொறுத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்,அந்தமான்,மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு தமிழக மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.