• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மலம்புழா அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

August 3, 2018 தண்டோரா குழு

தமிழக கேரளா எல்லையோரம் அமைந்து உள்ள மலம்புழா அணை நான்கு ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டியதால்,அணையில் இருந்த நான்கு மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.

தமிழக கேரளா எல்லையோரம் மலம்புழா அணை அமைந்துள்ளது.கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக இந்த அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது.

இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இந்த அணையின் முழு கொள்ளளவான 150 மீட்டர் அளவை எட்டியதும்,இந்த அணையை கேரளா பொதுப்பணித் துறை அதிகாரிகள் திறந்தனர்.இந்த அணையில் உள்ள நான்கு ஷட்டர்கள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.

ஒவ்வொரு ஷட்டர்களும் வழியாக மெதுவாக தண்ணீர் திறக்கப்பட்ட காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.மேலும் இரவு நேரங்களில் கலர் மின்விளக்கு அலங்காரங்களுடன் ரம்மியமாக அணை காட்சியளித்தது.

இந்த அணை திறக்கப்பட்டதால் மலம்புழா,புதுப்பெரியாரம்,கத்தே துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.மேலும் அணை நிரம்பியதால் அப்பகுதியில் உள்ள விவசாயத்திற்கும் குடிநீர் தேவைக்கும் அதிகளவில் பயன்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க