August 10, 2018
தண்டோரா குழு
தமிழகம் மற்றும் கேரளா கர்நாடகாவில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்று மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது.திண்டுக்கல்,தேனி,நெல்லை,நீலகிரி,கோவை மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் தென்மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்தும்,தென் தமிழக கடலோரப் பகுதியில் தென் மேற்கு மற்றும் மேற்கு திசையில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.