November 27, 2018
தண்டோரா குழு
உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலத்துக்கான தேசிய விருதை தமிழகம் தொடர்ந்து 4வது முறையாக பெற்றுள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை,தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் 9–வது இந்திய உடல் உறுப்பு தான தினம் நிகழ்வு இன்று டெல்லியில் நடந்தது.இந்நிகழ்ச்சியில் உடல் உறுப்பு தானத்தில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் தொடர்ந்து 4 முறையாக முதல் இடம் வகிப்பதற்கான விருது வழங்கப்பட்டது.டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் தமிழக சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இதற்கான விருது பெற்றார்.
அப்போது அவர் பேசுகையில்,
“தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் ஒரு பொது இயக்கமாகவே செயல்பட்டு வருகிறது.சமீபகாலமாக தமிழகத்தில் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவது அதிகரித்து வருகிறது.தானமாக பெற்ற உறுப்புகளை கொண்டு பல்வேறு உறுப்பு மாற்று சிகிச்சைகள் தமிழகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.உடல் உறுப்பு மாற்று சிகிச்சைகளில் சிறந்த 1000 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மூலம் மாற்று அறுவை சிகிச்சைகள் தமிழகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. தேவைப்படுபவர்களுக்கு உறுப்புகள் ஒதுக்கீடு தொடர்பாகவும் ஆன்லைன் சேவைகள் தமிழகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது” என்றார்.