July 28, 2018
தண்டோரா குழு
தமிழகத்திற்கு கருணாநிதியின் தலைமை நீடிக்க வேண்டும் என ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நள்ளிரவில் மிகவும் மோசமானதால் அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.அங்கு உடனடி சிகிச்சையின் பலனாக கருணாநிதியின் நாடித் துடிப்பு இயல்பு நிலைக்குத் திரும்பியது.தொடர்ந்து அவர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்.இதையடுத்து இன்றும் அவர் உடல்நிலை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கேட்டறிந்து வருகின்றனர்.
இந்நிலையில், காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து ஸ்டாலினிடம் ஆடிட்டர் குருமூர்த்தி கேட்டறிந்தார் .
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“கருணாநிதி திமுகவுக்கு மட்டுமல்ல,தமிழகத்துக்கும் தலைவர்.அரசியல்,கலையில் மட்டுமல்ல எல்லாவிதத்திலும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர் கருணாநிதி.மாற்றுக் கருத்து இருந்தாலும் கருணாநிதி மீது மிகப்பெரிய மதிப்பு வைத்துள்ளேன்.தமிழகத்திற்கு கருணாநிதியின் தலைமை நீடிக்க வேண்டும்.அவர் குணமடையை இறைவனை பிரார்த்திக்கிறேன்” எனக் கூறினார்.