October 2, 2018
தண்டோரா குழு
வேதாந்தா நிறுவனம் எந்த ரூபத்திலும் தமிழகத்தில் கால்பதிக்க முடியாது என தமிழக துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ட்வீட் செய்துள்ளார்.
தமிழகம் உட்பட நாட்டில் 55 இடங்களில் ஹைட்ராகார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் டெல்லியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதில்,தமிழகத்தில் வேதாந்தா நிறுவனம் காவிரி டெல்டா பகுதியில் 2 இடங்களிலும்,ஓ.என்.ஜி.சி நிறுவனம் 1 இடத்திலும் ஹைட்ரோகார்பன் எடுக்க, டெண்டர் எடுத்துள்ளது.சிதம்பரத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனமும்,நாகையில் வேதாந்தா நிறுவனமும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி பெற்றுள்ளது.இதன் மூலம் தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில்,தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேதாந்தா நிறுவனம் எந்த ரூபத்திலும் தமிழகத்தில் கால்பதிக்க முடியாது என ட்வீட் செய்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
“வேதாந்தா நிறுவனம் எந்த ரூபத்திலும் தமிழகத்தில் கால்பதிக்க முடியாது.வேதாந்தா நிறுவனம் ஆளுமை செலுத்த முயற்சிப்பதை தமிழக அரசு நிச்சயம் தடுக்கும்.தமிழக மக்களுக்கு விரோதமான,தீங்கிழைக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது” எனக் கூறியுள்ளார்.