• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதல்வர் மீதான டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

October 29, 2018 தண்டோரா குழு

முதல்வர் மீதான டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார்.எனினும்,அந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி,அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து,அக்டோபர் 12ம் தேதி இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,புகாரில் முகாந்திரம் இருப்பதாலும்,லஞ்ச ஒழிப்புத்துறை என்பது முதல்வர் அதிகாரத்தின் கீழ் வரும் துறை என்பதால் சிபிஐ விசாரணை நடத்துவதே சரி என்று சிபிஐ விசாரணைக்கு உத்திரவிட்டது.

இதனை எதிர்த்து CBI விசாரிப்பதற்கான அவசியம் இல்லை எனக்கூறி தமிழக லஞ்ச ஒழிப்பு துறை தரப்பிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில்,மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நெடுஞ்சாலைத் துறையில்,முறைகேடு என்று தெரியவந்தால்,டெண்டரை ரத்து செய்யத்தானே நீங்கள் கோரியிருக்க வேண்டும்.அவ்வாறு எந்த ஒரு வழக்கும் நீங்கள் தொடரவில்லை.ஆனால் முதல்வருக்கு எதிராக விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை ஏன் முன் வைத்தீர்கள் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதனை தொடர்ந்து,முதல்வர் மீதான டெண்டர் முறைகேடு புகாரை CBI விசாரிக்க இடைக்கால தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும், இதுதொடர்பாக ஆர்.எஸ்.பாரதி 4 வாரங்களுக்குள்,பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

மேலும் படிக்க