• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி புறப்பட்டார் முதல்வர் பழனிசாமி

November 21, 2018 தண்டோரா குழு

பிரதமர் மோடியை சந்தித்து கஜா புயல் பாதிப்புக்கு நிவாரண நிதி கோர முதலமைச்சர் பழனிசாமி டெல்லி புறப்பட்டுள்ளார்.

கடந்த 16-ந் தேதி‘கஜா’ புயல் தமிழகத்தை தாக்கியதில் நாகப்பட்டினம்,திருவாரூர்,தஞ்சாவூர்,புதுக்கோட்டை,ராமநாதபுரம்,கடலூர்,திண்டுக்கல்,சிவகங்கை,கரூர், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. 45-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர்.சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் குடிசை வீடுகளும்,ஓட்டு வீடுகளும் சேதம் அடைந்தன.சுமார் 88 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் உள்ள பயிர்கள் சேதமடைந்தன.குறிப்பாக,நெல்,தென்னை, வாழை அதிக அளவில் அழிந்து போய் உள்ளன.

புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.சேதத்தை மதிப்பிடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இதையடுத்து,நேற்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி,‘கஜா’ புயல் பாதித்த பகுதிகளை நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,பிரதமர் மோடியை நேரில் சந்தித்து,புயல் சேதம் குறித்து விளக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து இன்று சென்னை தலைமைச் செயலகத்தில்,அமைச்சர்கள்,அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் பழனிச்சாமி சேத மதிப்பு குறித்த விவரங்கள் அடங்கிய பட்டியலுடன் இன்று மாலை 5.20 மணிக்கு டெல்லி புறப்படுகிறார்.சென்னையில் இருந்து விமானத்தில் செல்லும் அவர் இரவு அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார்.இதையடுத்து,நாளை காலை 10 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார்.

மேலும் படிக்க