October 25, 2018 
தண்டோரா குழு
                                தமிழகத்தில்,20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதை விட,சட்டமன்ற தேர்தலை நடத்துவதே முறையாகும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் உத்தரவு செல்லும் என்று 3வது நீதிபதி சத்யநாராயணன் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.மேலும்,சபாநாயகர் முடிவில் தவறு இல்லை என்றும் தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை என தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில்,தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதை விட,சட்டமன்ற தேர்தலை நடத்துவதே முறையாகும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 
இன்றைய உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்துவதைத் தவிர்க்க முடியாது.18+2 தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடத்துவதை விட, முழு சட்டமன்றத் தேர்தலை நடத்துவதே முறையாகும் என பதிவிட்டுள்ளார்.