• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் என நம்புகிறேன்- குருமூர்த்தி

May 9, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் என நம்புகிறேன் என குருமூர்த்தி கூறியுள்ளார்.சென்னையில் FICCI தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது.இதில் துக்ளக் பத்திரிகை ஆசிரியரும் ஆடிட்டருமான குருமூர்த்தி கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு சிறந்த முடிவு.சிறு,குறு தொழில் பற்றி பிரதமர் மோடியிடம் கூறினேன் அதை கேட்டதும் பிரதமர் அதிர்ச்சியடைந்தார்.கர்நாடக தேர்தலை கருதி காவிரி திட்டவரைவை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியது நல்லது.

காவிரி பிரச்னையில் வேறு சிந்தனையுடைய கர்நாடகா,கேரளா பேசி முடிவுக்கு வர வேண்டும். தமிழக முதல்வரை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கினால்,கர்நாடக முதல்வரும் சந்திக்க நேரம் கேட்பார்;முதல்வர்களை சந்திப்பது தான் பிரதமர் வேலையா?அதிமுக அரசுக்கு செயல்பாடு ஒன்று இருப்பது போல் தெரியவில்லை இருந்தால் பார்க்கலாம். நீட் குறித்து முழுபுரிதல் யாருக்கும் இல்லை என்பதால் போராட்டம் நடைபெற்று வருகிறது.கர்நாடக தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என நம்புகிறேன்.அதைபோல் ரஜினிக்கு நான் ஆலோசகராக உள்ளேன் என்பதில் உண்மை இருந்தால் எனக்கு பெருமைதான்.தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது; அந்த வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் என நம்புகிறேன்”.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க